நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சையில் அது தாக்கத்தை செலுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

35000 ஆசிரியர்கள் அதிபர்கள் பரீட்சைக் கடமையில் ஈடுபட உள்ளதாகவும் இதில் அநேகமானவர்கள் பல கிலோ மீற்றர்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை சாதாரண தரப் பரீட்சையை பாதிக்கும்: பிரியந்த பெர்னாண்டோ

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here