நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் அதனை சூழவுள்ள பகுதியில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறப்பு அதிரடிப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கலகம் அடக்கும் பிரிவு பாரிய அளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினமும் நாடாளுமன்றத்தை பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகையிடலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here