இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது இடைநிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையின் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், பெற்றோல் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை சென்றடைய குறைந்தது மூன்று நாட்கள் ஆகும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எனவே, இந்த விடயத்தினைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அணிவகுத்து நேரத்தையும் சக்தியையும் வீணாக்க வேண்டாம் என அமைச்சர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல்வேறு விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பிறப்பித்துள்ளது.

இவ்வாறான நிலையில், தமது விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது இடைநிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்புஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here