இலங்கையில் எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்தும் எரிபொருளை பதுக்கி வைப்பதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு மறைத்து வைத்து கறுப்பு சந்தை ஊடாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த பட்சம் 10,000 ரூபாவுக்கு ஐந்து லீற்றர் எரிபொருளை தருமாறு இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் தன்னிடம் கேட்டதாக கொழும்பு பிரதேச முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் பெட்ரோலை 1200 – 2000 ரூபா வரையிலான அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் கடந்த சில நாட்களாக இவ்வாறான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் இடங்களை பொலிஸார் சோதனையிட்டு வருகின்றனர்.

கறுப்பு சந்தையில் பெருந்தொகையில் விற்பனையாகும் பெட்ரோல்

கறுப்பு சந்தையில் பெருந்தொகையில் விற்பனையாகும் பெட்ரோல்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here