மே மாத இறுதிக்குள் நாடு எரிபொருளின்றி மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, பெட்ரோல் விநியோகம் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை சென்றடைய குறைந்தது மூன்று நாட்கள் ஆகும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எனவே, இந்த விடயத்தினைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அணிவகுத்து நேரத்தையும் சக்தியையும் வீணாக்க வேண்டாம் என அமைச்சர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நெருக்கடி நிலையை எட்டியுள்ளதுடன், பல பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறையால் பல வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறை  -  மே மாத இறுதிக்குள் நாடு மூடப்படும் அபாயம்எரிபொருள் பற்றாக்குறை  -  மே மாத இறுதிக்குள் நாடு மூடப்படும் அபாயம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here