சர்வ கட்சி அரசாங்கத்தின் கீழ் ஆரம்பமான முதல் நாடாமன்ற அமர்வில், விட்டுக்கொடுப்புக்கு தயாரில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருந்து பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.

முன்னதாக நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமானபோது, கடந்த நாடாளுமன்ற அமர்வில், பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அந்த நிலையில் இருந்து விலகியைதை அடுத்து, பிரதி சபாநாயகருக்கான தெரிவை சபாநாயகர் கோரினார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி கவிரட்னவை பிரதி சபாநாயகராக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்

இதனையடுத்து ஆளும் கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டது.

இந்தநிலையில் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரப்பட்டது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஆளும் கட்சியில் இருந்து விலகிய விமல் வீரவன்ச உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

நாடு இருக்கும் நிலையில் பிரதமரும் எதிர்கட்சி தலைவரும் இணைந்து இதில் தீர்மானம் ஒன்றை எட்டவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை மீறி வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், தமது உறுப்பினர்கள் வாக்குகளை நிராகரிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தனர்.

இதனையடுத்து முன்மொழியப்பட்டவர்களில் இருவரில் ஒருவர் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள சபாநாயகர் அவகாசத்தை வழங்கினார்.

எனினும் இதற்கு இரண்டு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதன் காரணமாக வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி வாக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பின்படி அஜித் ராஜபக்சவுபுக்கு 109 வாக்குகளும், ரோஹினி கவிரட்னவுக்கு 78 வாக்குகளும் கிடைத்தன. 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதனையடுத்து பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பமானது.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளையின் மரணம் குறித்து நாடாளுமன்றம் தமது கவலையை வெளியிடுவதாக சபாநாயகர் அறிவித்தவேளையில், ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், அந்த அறிக்கை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை என்று சபாநாயகர் அறிவிக்கவேண்டும் என்று அவர்கள் கோசமெழுப்பினர்.

இதனையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின்படி, சபாநாயகர், அமரகீர்த்தி அத்துகோரளையின் கொலை என்ற சொல்லை இணைத்து தமது கவலையை வெளியிட்டார்

ஆளும் கட்சியின் அஜித் ராஜபக்ச நாடாளுமன்றின் பிரதி சபாநாயகராக தெரிவு! சர்வகட்சி நாடாளுமன்ற அமர்விலும் முரண்பாடு!

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here