புதிய இணைப்பு
பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை ஆதரித்தார்.
இதேவேளை, அஜித் ராஜபக்சவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெறும் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இதுவாகும்.