முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு சதிகள் இடம்பெறுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான பிரதமர் பதவி தொடர்பான இணக்கப்பாடு இரண்டு வாரங்களுக்கு முன்னரே எட்டப்பட்டு விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,