கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகின்ற நிலையில் ஜூன் மாதம் 2ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டை மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here