1988ஆம் ஆண்டு இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த போர் சித்திரவதை முகாம்.

கிரிபத்கொட பியகம வீதியின் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இரசாயன உர ஆலை அதிகாரிகள் விடுதியையே இலங்கை பொலிஸ் தனது முக்கியமான சித்திரவதை முகாமாக மாற்றியிருந்தது.

இலங்கை பொலிஸின் சி.எஸ்.யு என்ற சிறப்பு பிரிவு அந்த விடுதி வளாகத்தை தனது சிறப்பு முகாமாக மாற்றியிருந்தது.

இலங்கை பொலிஸின் சிரேஷ்ட அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அந்த சிறப்பு முகாமிற்கு பொறுப்பாக செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

அந்த விடுதி வளாகத்தில் இருந்த 64 வீடுகளில் சிலவற்றில் இலங்கை பொலிஸார் தங்கியிருந்தனர்.

பலவற்றில் பொலிஸாரால் கடத்தி வரப்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் நிர்வாணமாக கைகள் கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சித்திரவதை என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை பார்க்க வேண்டுமானால் அந்த பட்டலந்த சித்திரவதை முகாமிற்கு ஒரு தடவை சென்று திரும்ப வேண்டும் என கூறுவார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here