புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவரது நியமனத்திற்குப் பிறகு இந்தியா-இலங்கை உறவுகள் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

இலங்கை நாட்டின் நெருக்கடியான பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை தான் ஏற்றுக்கொண்டதாகவும்,அதை  நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விக்கிரமசிங்கவின் நியமனத்திற்குப் பின்னர் இலங்கை மக்களுக்கு நாட்டின் அர்ப்பணிப்பை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிககரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும் என்று உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது, அக்டோபர் 2016, ஏப்ரல் 2017, நவம்பர் 2017 மற்றும் அக்டோபர் 2018 ஆகிய நான்கு முறை இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளது

மிகவும் சிறப்பு! இந்தியா தொடர்பில் ரணிலின் கருத்து!மிகவும் சிறப்பு! இந்தியா தொடர்பில் ரணிலின் கருத்து!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here