நாட்டில் நடைமுறையிலுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இன்று ஒரு பிரச்சினையும் பதிவாகாத பட்சத்தில் நாளை காலை ஊரடங்கு உத்தரவை நீக்கி சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு உண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக கடந்த 9ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here