இலங்கை மத்திய வங்கியின் (CBSL)ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய தேசிய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் அடங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சஜித் பிரேமதாச கூறுகையில்,
இந்த நெருக்கடியை சமாளிக்க தனது கட்சி எப்போதும் தனது ஆதரவை வழங்கி வருகிறது. எவ்வாறாயினும், எந்தவொரு நெருக்கடியையும் தூண்டுபவர்களுடன் இணைந்து செயற்படாத வரையில் தமது கட்சி எந்தவொரு பொறுப்பையும் ஏற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“இந்த நெருக்கடியை சமாளிக்க நாங்கள் எப்போதும் எங்கள் தளராத ஆதரவை வழங்குகிறோம். எந்தவொரு நெருக்கடியைத் தூண்டுபவர்களுடனும் பணிபுரியாமல் இருக்கும் வரை எந்தவொரு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.