நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்த நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

நாளை காலை 10.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கூட்டத்தின் நேரம் மாறலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாடாளுமன்ற செயற்பாடுகள் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here