இலங்கையில் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 12 மணி முதல் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை மற்றும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீதான தாக்குதல் என்பவற்றை கண்டித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here