கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்டு  வந்த போராட்டத்தில் தற்போது சில கும்பல்கள்  உள்நுழைந்து  கூடாரங்களை தகர்த்தெறிந்து அராஜக நிலையில் ஈடுபட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சென்றுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் சிலரால் முன்னெடுக்கப்பட்ட இந்த அராஜக நிலையால் இதுவரையில் 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு  காலி முகத்திடல் வளாகம் ஒரு யுத்தக் களம் போல காட்சி அளிக்கின்ற நிலையில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, தடிகளுடனும், பொல்லுகளுடனும் அங்கு அடியாட்கள் சுற்றும் காட்சிகளைக் காணக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் களத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சென்றுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here