நாட்டில் இன்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலையங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம், M N O X Y Z ஆகிய வலையங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொழும்பு நகர்ப்புற வலையங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும் நாடு முழுவதும் தற்போது அமுலாக்கப்படும் மின்வெட்டு காலம் மேலும் அதிகரிக்கப்படமாட்டாது என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here