இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, புதிய அமைச்சரவை நாளை மாலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ , சமல் ராஜபக்ஸ, ஷசிந்திர ராஜபக்ஸ ஆகியோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

பதவி காலம் முடியும் வரை தாம் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் – ராஜினாமா செய்ய தயாராகும் அமைச்சர்கள்

அத்துடன், புதிய ஆட்சியை அமைக்க எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், எனினும், எதிர்கட்சியினர் முன்வராதமையினாலேயே, புதிய அமைச்சரவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here