கொழும்பு – பொரளை சந்தியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்பு ஆடைகளுடன், கறுப்பு கொடிகளை ஏந்திய வண்ணம் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை பொரளை சந்தி முழுவதும் கறுப்பு கொடிகளும் கட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், நாளைய தினம் காலை அனைத்து தொழிற்சங்க கூட்டணியும் ஒன்றிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கட்ட போராட்டம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பின் பின் வீடு செல்வது போல் அல்லாமல் ராஜபக்சவினர் பதவிகளை விட்டு செல்லும் வரைக்கும் தொடர் ஹர்த்தால் மூலம் இலங்கை முழுமையாக முடக்கப்படும் என்ற தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here