பங்களாதேஷ், இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 56 வகை அத்தியவசிய மருந்துகளை அன்பளிப்பு செய்ய முன்வந்துள்ளது.
இந்த மருந்து தொகையானது இலங்கை ரூபாய் மதிப்பில் 830 மில்லியன் எனக் கூறப்படுகிறது.
பங்களாதேஷ் வழங்கும் இந்த மருந்து தொகை டாக்கவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரிடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு தொடர்பான நெருக்கடி காரணமாக நாட்டிற்கு தேவையான அத்தியவசிய மருந்துகளை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நாடு முழுவதும் பெரும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நோய் தொற்றுகளுக்கு உள்ளாகாமல் சுகாதார பாதுகாப்புடன் கவனமாக இருக்குமாறு மருத்துவர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.