அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பௌத்த மதம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் மற்றும் தமிழீழத்திற்கான பாதையை அமைக்கும் வகையிலும் செயற்பாடுகள் முனனெடுக்கப்படுமாக இருந்தால் அதனை பொறுக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்தில் இவ்வாறானவர்கள் இருக்கின்றனர் என்றும், அவர்களை அடையாளம் கண்டு அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here