அம்பாறையில் தலைக்கவசம் அணியாத நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 700 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒன்று கூடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிலில் தலைக்கவசம் அணியாமல் சென்ற நபரை பொலிஸார் நிறுத்திய போதும் நிறுத்தாமல் சென்றமையினால் அவரை கொடூரமாக தாக்கியதாக தெரியவருகிறது.

பொலிஸாரின் தாக்குதல் காரணமாக படுகாயமுற்ற நிலையில் அவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பொலிஸ் சோதனைச்சாவடியை தாக்கி அழித்ததுடன் பொது மக்களுக்கும் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக வந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரையும் பொது மக்கள் தாக்கியுள்ளனர். இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பொது மக்களால் தாக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுபதிகாரி உட்பட 11 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here