அடுத்த வருடத்திற்காக இலங்கைக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கையை இந்த வாரத்திற்குள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு வருடத்திற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த இரு ஆண்டுகளில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனமானது மெட்ரிக் தொன் ஒன்றுக்கு அறவிட்ட தொகையை விட 9 டொலர் குறைவாக புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறைவடைகிறது.

இதற்கமைய எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலைமனு கோரப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here