இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 490 கிலோ கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது குருநகரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கேரளக் கஞ்சாவை கடத்த முயன்றபோதே இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளியின் பின்பு அதிகளவான கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளதோடு இதன் பெறுமதி 10 கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here