Sun sets behind a power tower near a building in New Delhi February 4, 2006. REUTERS/Kamal Kishore/Files

நாடளாவிய ரீதியில் இன்று (04) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இரண்டு பிரதான வலயங்களில் காலை 09.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்படும்  என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய மண்டலங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணி நேரமும், மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை 01 மணி நேரம் 20 நிமிடங்களும்  மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 2 மணி நேரமும் மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை 01 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், கொழும்பு வர்த்தக வலயத்திற்கு காலை 06.00 மணி முதல் 09.20 மணி வரை மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்தாலும், மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here