பிரபல அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தொடர்புபட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை மக்கள் விடுதலை முன்னணி அம்பலப்படுத்தியுள்ளது.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நேற்று விசேட ஊடக சந்திப்பை நடத்தி அந்த ஆவணங்களை ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க அம்பலப்படுத்தியுள்ளார்.
நாட்டை சீரழித்த திருடர்களை மொத்தமாக வெளிப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் ஜே.வி.பியின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்ட 500 இற்கும் மேற்பட்ட கோப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையம் எப்படி மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு சொந்தமானது என்பதை தேடிப்பார்க்க வேண்டும் எனவும் அநுர தெரிவித்துள்ளார்.