தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில், பிரதமர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் மகிந்த ராஜபக்சவின் பெயரை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் எனவும், மாற்று தெரிவுகள் இருக்காது எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடமே அவர் இவ்வாறு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனினும் மகிந்தவின் பெயரை மீண்டும் பரிந்துரைப்பதில் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.