எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்படும், வாகனங்கள் நிறுத்தப்படும், மின்சாரம், எண்ணெய், துறைமுகம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்பாடுகள் சீர்குலைக்கப்படும் என்றார்.

சிவில் அமைப்புக்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சங்கங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here