இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளை பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அக்கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்புப் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு துரிதமாக உதவி வழங்க வேண்டிய தேவையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

இந்த நிலையில் உலக வங்கிக் குழும நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டமான குறிப்பீடற்ற துரித பதிலளிப்பு பிரிவின் மூலம் அதற்கான நிதியை வழங்குவதற்கு உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதற்கமைய அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட பயனாளிக் குடும்பங்களுக்கு மே மாதம் தொடக்கம் ஜுலை மாதம் வரை குறித்த உதவிகளை வழங்குவதற்கான விசேட கொடுப்பனவு நடவடிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here