எரிவாயு விலை அதிகரிப்பின் அழுத்தத்தை மக்கள் தாங்க வேண்டுமானால் அரச நிறுவனமான லிட்ரோவின் உயர்மட்ட அதிகாரிகளும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஒன்றின் தலைவர் மாதாந்தம் 3 மில்லியன் ரூபா பாரிய சம்பளம் பெறுவதாக தெரியவந்ததாகவும், அவ்வாறு சம்பளம் பெறுவதில் நியாயம் இல்லை எனவும் அசேல குறிப்பிட்டுள்ளார்.