நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

சாதாரணமாக ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தாலும் ஜனாதிபதிக்கு எதிராக இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதி மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை நாட்டுக்கு காட்டுவதும் சர்வதேசத்திற்கு அதனை உறுதிப்படுத்துவதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here