பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலிட்டுள்ள பதிவொன்றின் மூலம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்த பதிவில் மேலும், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அத்துடன், பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஒன்றிணையுமாறும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை அண்மையில் மற்றுமொரு பதிவில் ஆளும் கட்சிக்குள் பாரிய பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.