நாட்டில் குறைவடைந்த வெளிநாட்டு நாணய ஒதுக்குகள் இலங்கையர்களுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற நாளாந்த தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு பாரியளவான இடர்பாடுகளை தோற்றுவித்ததன் காரணமாக அனைத்து இலங்கையர்களும் தற்போது சமூக, பொருளாதார மற்றும் நிதியியல் போன்ற இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எனவே இலங்கை மக்களால் முகங்கொடுக்கப்படும் இன்னல்களை இலகுபடுத்த உதவுவதற்காக வெளிநாட்டில் வதிகின்ற அனைத்து இலங்கையர்கள் மற்றும் எந்தவொரு தேசத்தையும் சேர்ந்த அனைத்து நலன்விரும்பிகளின் வெளிநாட்டு நாணய அன்பளிப்புக்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் வெளிநாட்டு நாணய அன்பளிப்புக்களை எவ்வாறு அனுப்புவது, அன்பளிப்புக்கான பயன்பெறுநரின் முகவரி தொலைபேசி இலக்கங்கள், நாணய அன்பளிப்புக்களை வைப்பிலிட வேண்டிய கணக்கு விபரங்கள் என்பன வெளியிடப்பட்டுள்ளன.

Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here