பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ட்ரக் மற்றும் பேருந்துகள் பயன்படுத்தி அலரி மாளிகையின் முன்பக்கத்தை மூடி பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மக்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளமையினால் பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அலரி மாளிகையின் முன்னிலையில் தற்காலிக கூடாரங்களை அமைத்து மக்கள் எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here