2021 ஆம் ஆண்டு 3.6 சதவீதமாக இருந்த இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.6 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

இந்த வாரம் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான கணிப்புகளை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பிற்கமைய, 2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில், உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஏற்கனவே இருக்கும் பாதிப்புகள் மற்றும் கடன் நிலைத்தன்மை அழுத்தங்களை அதிகப்படுத்தி, சமூக அமைதியின்மை மற்றும் கொள்கை ஸ்திரமின்மைக்கு வழிவகுத்துள்ளதென சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் செயல் இயக்குனர் Anne-Marie Gulde-Wolf தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here