தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்வரும் மாதங்களில் விசேட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவும் பலதரப்பு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இதற்காக நிதியை பெற்றுக்கொள்ள நம்புவதாக அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நெருக்கடியில் உள்ளார்கள் என எங்களுக்கும் தெரியும். இதனால் மக்களுக்கு எதிர்வரும் மாதங்களில் விசேட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சர் நாலக கொடஹேவாவும் கலந்துகொண்டார்.

இதன்போது இலங்கையில் இருந்து உகண்டாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் விசேட விமானங்கள் தொடர்பில் அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சரியான பதிலை அமைச்சர் வழங்காமல் நழுவிச் சென்றுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here