இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மின்சாரக் கட்டணங்களை 100 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

சில மின்சாரக் கட்டணங்கள் 100 வீதத்தினால் உயர்த்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெற்கு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் சில மின்சாரக் கட்டணங்கள் 300, 400 வீதமாக உயர்வடையும் சாத்தியங்களும் உண்டு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here