சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நாளை சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் 2021 ஆம் ஆண்டு தரம் 6,7 மற்றும் 8 ஆகிய மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் (25/04/2022) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எனினும் கடந்த 20ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை நாளைமறுதினம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here