தனது பதவி விலகல் கடிதத்தினை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் கடிதத்தை அரசதலைவரிடம் ஒப்படைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கடந்த 18ஆம் திகதியன்று அமைச்சராக பதவியேற்ற நாலக கொடஹேவ 20ஆம் திகதியன்று தமது அமைச்சு பதவியில் இருந்து விலகப்போவதாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும் எனினும் அதனை ஊடகங்களுக்கு அறிவிக்கவேண்டாம் என்று அரச தலைவர் அவரை கேட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் இந்த தகவலை வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான், இதனை நாலக கொடஹேவைவிடம் உறுதிபடுத்திக்கொள்ளமுடியும் என்று தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here