நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கசபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையிலேயே நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த தீர்மானித்துள்ளார்.

அத்திருத்தப்பட்ட அரசியலமைப்பினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பாகும் என பிரதமரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here