மக்கள் விரும்பினால் காபந்து அரசாங்கத்தின் தலைவராகி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் திறமை தனக்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இளைஞர் சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு இணங்கி அனைவரும் வெளியேற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு காபந்து அரசாங்கத்தை தலைமை தாங்குவதற்கு தயார் என ரணில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றரை வருடங்களுக்குள் தீர்வு காண முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவியை ரணில் வகிக்கவுள்ளதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here