அரசியல் நெருக்கடி நிலைமை நீடிக்குமாக இருந்தால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கத்திற்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.