புதிய அமைச்சரவை இன்று காலை 10.30 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 3ஆம் திகதி இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்திருந்தது.

இதனை தொடர்ந்து 4ஆம் திகதி நிதி, வெளிவிவகாரம், கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதாகவம், ஏனையவர்கள் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புதிய அமைச்சரவையில் சுமார் 20 பேர் இருப்பார்கள் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here