தமது உள்ளக செயற்பாடுகள் பிரச்சினையின்றி இயங்குகின்றன.

வெளிப்புற பிரச்சினைகளே சந்தை விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக லங்கா லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

கொள்வனவு கட்டளைகள் வருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், நாட்டின் நிலையற்ற நிலை காரணமாக அடுத்த சில மாதங்கள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம் என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாணயக்கடிதங்களை திறப்பது இப்போது எளிதானது. ஆனால் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இன்னும் சில சவால்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநியோகத்தின் மீதான வெளிப்புற அழுத்தங்களே நிறுவனத்தின் திறனைப் பாதிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து 5 நாட்களுக்கு பொது விடுமுறைக்காக தமது விநியோகத்தை மூடுவதாக லிற்றோ அறிவித்தது,

இது பொது மக்களிடமிருந்து அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here