அரசு நடத்தும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட்டின் 175 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்க உத்தரவாதப் பத்திரங்கள் மீதான மதிப்பீட்டை, ஜூன் 2024 இல், ‘CC’ இலிருந்து ‘C’ ஆக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் குறைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்திரங்கள் மீதான மதிப்பீட்டு நடவடிக்கையானது, இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குனர் இயல்புநிலை மதிப்பீட்டை ‘CC’ இலிருந்து ‘C’ ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்ட அதன் வெளிநாட்டு நாணயப் பத்திரங்கள் ‘CC’ இலிருந்து ‘C’ ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசினால் வழங்கப்பட்ட நிபந்தனையற்ற மற்றும் மீளப்பெற முடியாத உத்தரவாதத்தின் காரணமாக தேசிய கேரியரின் பத்திரங்கள், இலங்கை அரசின் அதே மட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெரும்பாலும் ஒரு சில நீண்ட தூர விமானங்களுடன் பிராந்திய விமான சேவையாக இயங்குகிறது. டிசம்பர் 2021 நிலவரப்படி, நிறுவனம் முறையே ஏர்பஸ் ஏ330 மற்றும் ஏ320 குடும்பத்தில் பரந்த மற்றும் குறுகிய அமைப்புடைய விமானங்களைக் கொண்டுள்ளது.

2019ம் ஆண்டில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 175 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை வெளியிட்டது, இது ஜூன் 2019 இல் முதிர்ச்சியடைந்த அதே அளவிலான வெளியீட்டை மாற்றியமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here