நாட்டின் நலன் கருதி அனைவரும் அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டோம் என கூறிவரும் முன்னாள் அமைச்சர்கள், ஏன் அரசிலிருந்து வெளியேறாமல் ராஜபக்சர்களுடன் ஒட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் ராஜபக்சர்களை இன்னமும் நம்புகின்றீர்களா என்று அவர்களிடம் கேள்வி கேட்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு ராஜபக்சர்கள் மட்டுமன்றி முன்னாள் அமைச்சர்களும் பொறுப்புக்கூற கூற வேண்டும்.
ஏனெனில் தீர்மானங்களை எடுக்கும் அமைச்சரவையில் அவர்களும் அங்கம் வகித்தவர்கள்.
பதவி ஆசைக்காக ராஜபக்சர்களின் கால்களில் அவர்கள் விழுந்தவர்கள். எனவே, கூட்டுப் பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.