பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தோஷம் நீங்கி நல்லதொரு கிரக நிலை ஏற்பட்டுள்ளதாக பல ஜோதிடர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 15ஆம் திகதிக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தோஷம் நீங்கும் என ஆரூடம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருந்த போதிலும், இந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டதாக அலரி மாளிகைக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரத்தைச் சேர்ந்த ஞானக்காவின் ஆலோசனை பெற மாட்டார் எனவும், தனக்கான புதிய இரு ஆஸ்தான ஜோதிடர்களை மஹிந்த வைத்துள்ளதாக தெரிய வருகிறது. சமகாலத்தில் அவர்களின் ஆலோசனைக்கு அமையவே மஹிந்த செயற்பட்டு வருகிறார்.

பிரதமரின் ஜோதிட செயற்பாடுகள் மற்றும் ஜோதிடர்களை ஒருங்கிணைக்கப்படும் நடவடிக்கைள் பிரதமரின் அலுவலக தலைமை அதிகாரியினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

ஜோதிட ஆலோசனைக்கமைய, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஷிரந்தி ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மேற்கொண்ட அழுத்தம் மற்றும் அரசியல் ரீதியில் தாமரை மொட்டு கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மஹிந்த தனது இராஜினாமா தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here