திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொது இடத்தில், மதுபானம் அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்ட நான்கு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ வீரர்கள் நால்வர் பொது இடத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் செயற்படுவதாகவும், சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கோமரங்கடவல – கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்ட இராணுவ வீரர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த இராணுவ வீரர்களை இராணுவ பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாக கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here