காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பு விடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவினருடன் அரசாங்கம் கலந்துரையாடுவதற்கு தயார் என அவர் கூறியுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஐந்தாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here