கமத்தொழில் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க அந்த கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில், சாந்த பண்டார கட்சியில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்து நீக்க மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் சாந்த பண்டாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதியுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாந்த பண்டாரவுக்கு அமைச்சு பதவியை வழங்கி அவரை அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திரக் கட்சி இந்த முடிவு எடுத்துள்ளது.

கடும் சீற்றத்தில் சு.கவின் எம்.பிக்கள் குழு; ஜனாதிபதியுடனான சந்திப்பு புறக்கணிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கி அவரைக் கோட்டாபய அரசு வளைத்துப் போட்டதால் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சு.கவின் எம்.பிக்கள் குழு கடும் சீற்றமடைந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்சவுக்கும் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலைப் புறக்கணிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது.

சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அரசு பக்கம் தாவியதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள சாந்த பண்டாரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் தயாசிறி எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here